மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

4

மாவீரர் தின நினைவேந்தல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட கெலும் ஹர்ஷன என்பவருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 30ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருட கொண்டாட்டங்கள் எனக் கூறி சமூக ஊடக கணக்கு மூலம் பரப்பியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்படி, முகநூல் ஊடாக பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தூண்டுதல் போன்ற குற்றங்களின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 120 மற்றும் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed.