அநுர தரப்புக்கு வாழ்த்தையும் கூறி மிரட்டலும் விடுத்துள்ள மொட்டுக் கட்சி

4

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு பெருன்பான்மை கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு அடிபணிவது ஜனநாயகம் என்றும், தேசிய மக்கள் சக்தி மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால், அவர்கள் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வாக்களித்தவர்களையும், வாக்களிக்கச் செல்லாதவர்களையும் ஒன்று சேர்க்கும் போது, அங்குதான் பெரும்பான்மை உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.