இலங்கையின் இயற்கை அனர்த்தம்: உயரும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை

2

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (29.11.2024) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 14 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதில், அம்பாறை மாவட்டத்தில் 09 பேரும், புத்தளம் மாவட்டத்தில் இருவரும், பதுளை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 02 பேர் காணாமல் போயுள்ளதாகவும், பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, இலங்கையின் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 132,289 குடும்பங்களைச் சேர்ந்த 442,185 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 12,334 குடும்பங்களின், 38,594 பேர் தற்போது 341 பாதுகாப்பு முகாம்களிலும், 45,415 குடும்பங்களைச் சேர்ந்த 115,628 பேர் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

Comments are closed.