தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது தேராவில் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுத்துடையவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம்(27.11.2024) கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரரின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் அவர்களது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்தனர்.
இதற்கமைய அவர்களையும் கண்ணியமான முறையில் இன்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
Comments are closed.