நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோகத்தடை ஏற்படுமாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமையினையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, CEB Care எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1987 எனும் துரித இலக்கத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அறிவிக்க முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது
வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் சேவையினை பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு – கிழக்கில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி புயலுக்கு முந்திய நிலையில் உள்ளதாகவும் அடுத்த கட்டமாக அது ஒரு புயலாக மாறும் எனவும் யாழ் (Jaffna) பல்கலைக்கழகத்தின் புவியியல் துரையின் தலைவர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீப ராஜா (Nagamuthu Pradeepa Raja) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.