பிரான்ஸ் நாட்டு காவல்துறையை அதிசயப்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர்

7

பிரான்ஸின் (France) பரிஸில் (Paris) விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது அகவை தினம் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

பரிஸின் புறநகரப்பகுதியான ஆர்ஜெந்தெய் பகுதியில் நேற்று (25) நள்ளிரவு கடந்து இன்று (26) அதிகாலை பிறந்தவுடன் இந்தக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

அதிகாலையில் மழைபெய்த நிலையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

இது அங்கிருந்த பிரெஞ்சு மக்கள் மற்றும் அந்நாட்டு காவற்துறையையும் ஆச்சரியப்பட வைத்திருந்தது.

இந்த நிகழ்வில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் 8 பாடல்களை கொண்ட தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் வெளியிடப்பட்ட அந்தப்பாடல்கள் பாடகர்களால் மேடையில் பாடப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் தற்போது சமுகவலைத்தளங்களில் மேதகு 70 மற்றும் 70 என்ற அடையாளங்களுடன் அகவைதின வாழ்த்துப் பதிவுகள் முன்னிலையாகி வருகின்றன.

Comments are closed.