இரு அமைச்சுக்களின் செயலாளர்களாக பெண்கள் நியமனம்

3

2 அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலராக ஆ.சிறி  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நேற்று 24.11.2024 நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வடக்கு மாகாண பேரவையின் செயலராக ம.ஜெகூ நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.