பலஸ்தீனத்தில் போர் முடிவுக்கு வரும் வரையில், இஸ்ரேலுடன் பணயக்கைதிகளுக்கான கைதிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் இருக்காது என ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தெரிவித்துள்ளார்.
பேச்சு வார்த்தைகள் தொடர்பாக மத்தியஸ்த நாடுகளுடன் தொடர்ந்து அழைப்புகள் விடுத்த வருகின்ற போதிலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கம் தடுமாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை இடுவதாக அல்-ஹய்யா கூறியுள்ளார்.
மேலும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவில்லை என்றால், எதிர்ப்பு மற்றும் குறிப்பாக ஹமாஸ், கைதிகளை ஏன் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தாயராக இருப்பதாக ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளதுடன், அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துபவர் நெதன்யாகு என்பதை யாதார்த்தம் நிரூபிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு அமெரிக்கா நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
Comments are closed.