இந்தியா (India) செல்லும் பயணிகள் மீது கனடா (Canada) தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த், மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் Air Canada, இந்தியா செல்லும் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டது.
இந்நடவடிக்கைகள் பிரிட்டிஷ் கொலம்பியா, ரொறன்ரோ உள்ளிட்ட விமான நிலையங்களில் நீண்ட பரிசோதனை நேரத்தை உருவாக்கி வருவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
Air Canada பயணிகளுக்கு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாக வருமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாதம் பது டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற Air India விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் கனடாவின் இகாலூயிட் நகருக்கு திருப்பிச் செல்ல வேண்டியதாக இருந்தது.
ஆய்வு செய்தபோது குண்டுகள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற காலிஸ்தான் ஆதரவாளர், Air India விமானங்களை குறிவைத்து நவம்பர் 1-19ஆம் திகதிகளில் பயணம் செய்ய மிரட்டல் விடுத்திருந்தார்.
Comments are closed.