மாத்தளை பொது வைத்தியசாலையில் (District General Hospital Matale) வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது சம்பவம் நேற்று (20.11.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி (Ratnapura) – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர் | Fake Doctor Arrested At Matale General Hospital
சந்தேக நபரின், நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.