இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் பெரும் மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாக பதிவாகியுள்ளது.
குருநாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் இன்று(20.11.2024) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, நாடாளுமன்றத்தை பார்வையிடவும் நாளையதினம்(21) முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடம்பரமான சொகுசு வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பேருந்தில் விஜயம் மேற்கொண்டுள்ளமை மாற்றத்தை பிரதிபலிக்கின்றது.
அநுர ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளியாகவே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
Comments are closed.