வரலாற்றில் முதல் தடவையாக வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திஸாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங்( Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
யாழ்.பருத்தித்துறை, சக்கோட்டை முனைக்கு நேற்று(19) விஜயம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு – கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் கடற்றொழில் குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களர்கள் என வேறுபாடுகளை கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கு சீனா ஒத்துழைப்புகளை வழங்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சக்கோட்டை முனையில் நிறுவப்பட்டிருக்கும் நல்லிணக்க நினைவுத்தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையே இலங்கையின் பலம் (unity in diversity is the strength of sri lanka) என்ற வாசகத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.