இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் : இருவர் கைது

15

இலங்கையில் (Sri Lanka)  இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் (India) இராமேஸ்வரத்தில் (Rameswaram) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் இருந்து கடல் வழியாகக் குறித்த தங்கம் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராமேஸ்வரம் வழியாக வாகனம் ஒன்றில் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்ட போது அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தங்கத்தை கடத்திச் சென்ற இருவரையும் இந்திய மத்திய அரசின் சுங்கத்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து, மீட்கப்பட்ட தங்கத்தையும் கைது செய்தவர்களையும் மதுரைக்குக் (Madurai) கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், பிடிபட்ட தங்கத்தின் பெறுமதி  இலங்கை நாணயத்தில் பத்து கோடி ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.