அநுர அமைச்சரவையில் இடம்பிடிக்காத முஸ்லிம்கள்

16

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையில் இன்றையதினம் 21 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இடம்பெற்றபோதிலும் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை.

எனினும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த அபூபக்கர் ஆதம்பாவா என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.