எலிசபெத் ராணிக்கு பின் நைஜீரியாவில் மோடிக்கு வழங்கப்பட்ட கௌரவம்

13

பிரித்தானியா (UK) ராணி எலிசபெத்துக்கு பிறகு இந்திய பிரதமர் மோடிக்கு நைஜீரியாவில் (Nigeria) உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்.

அந்த வகையில் பிரேசிலில் நடக்கும் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில் நைஜீரியா, பிரேசில், கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில், அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி நைஜீரியா சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு அங்கும் வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு வழங்கியுள்ளனர்கள்.

நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் நேற்று(17) அபுஜா சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நைஜீரியா சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

இருநாடுகளின் உறவு, வர்த்தகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன், எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த 2007 முதல் இருநாடுகள் இடையேயான உறவு என்பது தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் 27 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு நைஜீரியாவில் முதலீடு செய்துள்ளன.

இதனால் நைஜீரியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மிகவும் முக்கிய நாடாக உள்ளது. இதற்கிடையே தான் பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நைஜீரியாவில் கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் எனும் விருது மிகவும் உயரியதாக உள்ளது.

இந்த விருதை இதற்கு முன்பு மறைந்த பிரித்தானியா ராணி எலிசபெத்துக்கு கடந்த 1969ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

உலகளாவிய தலைவர் என்பதை பிரதிநிதித்துவபப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி இன்று பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‛கிராண்ட் கமாண்டர் ஒப் தி ஆர்டர் ஒப் தி நைஜர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எலிசபெத் ராணிக்கு பிறகு இந்த விருதை பெற்ற 2வது வெளிநாட்டு பிரபலம் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

இதுவரை வெளிநாடுகளில் 16 உயரிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் இது 17வது விருதாக அமைந்துள்ளது.

அதன்பிறகு இன்று நைஜீரியா பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து பிரேசில் செல்கிறார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நாளை மற்றும் நாளை மறுநாள் என்று 2 நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

அதன்பிறகு பிரேசிலில் இருந்து கயானாவிற்கு பிரதமர் மோடி செல்கிறார். நவம்பர் 20, 21ம் திக திகளில் கயானா ஜனாதிபதி முகமது இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார்.

அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கயானா செல்லும் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார்.

Comments are closed.