சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் திலித்துக்கு

19

2024 பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கம்பஹா (Gampaha) மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட சர்வஜன சக்தியின் தலைவர் திலித் ஜயவீரவுக்கு (Dilith Jayaweera) வழங்க சர்வஜன அதிகாரம் கட்சின்யின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட நிலையில் 178,006 வாக்குகளை பெற்றுக் கொண்டது.

1.60 வாக்குகளைப் பெற்ற நிலையில் ஒரு ஆசனங்களை கூட நேரடியாக கைப்பற்றவில்லை. கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளுக்கமைய 1 தேசிய பட்டியல் மாத்திரமே ஒதுக்கப்பட்டது.

சர்வஜன அதிகாரம் கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட உதய கம்மன்பில, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட திலும் அமுனுகம ஆகியோர் தோல்விடைந்துள்ளனர்.

இதனால் சர்வஜன கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை திலித் ஜயவீரவுக்கு வழங்க அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

தொழிலதிபர் திலித் ஜயவீர 2024 ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன கட்சி சார்பில் போட்டியிட்டு 122,096 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.