ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு

20

புத்தளம்(Puttalam) – வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பு ஆசிரியை மற்றும் மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில் இவ்வாறு தண்டிக்கப்பட்டதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை(18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments are closed.