நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் (Shehbaz Sharif) செரீஃப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை என்பவற்றின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இந்த தேர்தலினூடாக வெளிப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையுடனான தங்களது நெருக்கமான நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்குப் பாகிஸ்தான் உறுதியாகவுள்ளதாகவும் அவர் தேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு உலக நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.