பொதுத் தேர்தலுக்காக சென்ற மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

7

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தூர பிரதேசத்துக்கு சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (16) முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பமாகி நாளை (17) மற்றும் நாளை மறுதினம் (18) வரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 14ஆம் திகதியன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்கள் வாக்களிப்பதற்காக குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் விசேட போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.