தமிழர்களுக்கு நன்றி! நம்பியவர்களை கைவிடாமல் பாதுகாப்பதாக ஜனாதிபதி தரப்பில் உறுதி

4

கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் இம்முறை பொதுத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தேசிய மக்கள் சக்தி பதிவு செய்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் அதனை தெரிவித்துள்ளார்.

விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி தமக்கு கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மகத்தான வெற்றியின் அரசியல் நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்சாரங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையை பாதுகாத்து அதனை முன்னெடுத்துச் செல்லவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்காக அதனை பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ள ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வட மாகாணத்தில் ஐந்து ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.