குடிபோதையில் வாகனத்தை செலுத்தி இளைஞனை மோதிய வைத்தியர் கைது

15

கல்முனையில் (Kalmunai) மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞரை குடிபோதையில் கார் செலுத்தி சென்று விபத்துக்குள்ளாக்கிய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (08.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாதிக்கப்பட்ட இளைஞன் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய கார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் காரின் சாரதியான வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனத்தை செலுத்தி இளைஞனை மோதிய வைத்தியர் கைது | Doctor Arrested After Hit And Run

மேலும், கைதான வைத்தியரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், அவர் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.