வாக்களிப்பு நிலையத்தில் போதையில் தள்ளாடிய இரண்டு பொலிஸார் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.,
மாத்தறை, கிரிந்த ஜயவிக்ரம கனிஷ்ட கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே போதையில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், கிரிந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பயிலுனர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பொலிஸாரும் நேற்றைய தினம் வாக்குச்சாவடியில் மதுபோதையில் தள்ளாடியதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பிரகாரம், திஸ்ஸமஹாராம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments are closed.