தொடருந்து சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று பத்து தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் தொடருந்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொடருந்து சாரதிகள் இல்லாத காரணத்தினால் மேலும் 22 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடருந்து சேவைகளுக்கு பொறுப்பான அதிகாரிகளால் தேவையான எண்ணிக்கைக்கு சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க முடியாவிட்டால் இந்த நிலைதொடரும் தொடரும் என குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலைமையானது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்காலத்தில் மேலும் பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments are closed.