முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

10

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த இல்லங்கள் தொடர்பில் அமைச்சரவையில் முடிவொன்றை எடுக்க பொது நிர்வாக அமைச்சுகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மற்றும் அதன் மேலதிக செயலாளர் ஜானக ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நேற்று (13) கையளிக்கப்பட்ட அமைச்சர் இல்லங்களை பார்வையிட்டுள்ளனர்.

இல்லங்களை ஆய்வு செய்த பின்னர், அவற்றின் பாதுகாப்புக்காக மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 28 இல்லங்களும் அரசாங்கத்திடம் நேற்றையதினம் (13) கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.