சிறையில் அடைக்கப்பட்ட பிரபலங்களுக்கு இம்முறை வழக்கத்தை விட உயர் சலுகைகளை பெற முடியாமல் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறை அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு மரியாதை கிடைக்காததால் கைதிகள் கேலி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வதே, ஒருமுறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தாக்கி முழங்காலில் நிறுத்திய விதத்தை ஒருமுறை நினைவுபடுத்தியதுடன் அவரையும் அதே முறையில் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அர்ஜுன் அலோசியஸ் கடந்த வழக்குகளை போன்று சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டுவர முயற்சித்ததாகவும், ஆனால் அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் தற்போது சிறைச்சாலையில் தச்சன் வேலை செய்யும் பிரிவில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
Comments are closed.