அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம்

4

அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

24 மணி நேரமும் விமானம் தாமதம் ஏற்படுவது தொடர்பில் பயணிகளுக்கு உடனடித் தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கவும் விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்று விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த காலதாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.