நாங்கள் இதை செய்ய அதிகாரத்திற்கு வரவில்லை: பிரதமர் பகிரங்கம்

4

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவோ அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவுவதற்கோ நாங்கள் அதிகாரத்திற்கு வரவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மாலம்பே – அரங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான நாடாளுமன்றம் தேவை என தெரிவித்த பிரதமர், ஒரு பணக்கார நாடு அழகான வாழ்க்கையை உருவாக்க வேண்டுமானால், அதைச் செயல்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் தேவை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும், ஒரு சில திருடர்களை வைத்து பணக்கார நாட்டை உருவாக்க முடியுமா என கேள்வி எழுப்பிய பிரதமர், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் தாம் பெரும் பங்காற்றியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முடங்கிக் கிடந்த பல திட்டங்களைத் மீண்டும் தொடங்க முடிந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.