ஜனாதிபதியாகும் ட்ரம்ப் : வெளிநாடுகளுக்கு பறக்கும் அமெரிக்கர்கள்Donald Trump,

5

அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்(donald trump) வெற்றி பெற்றதை அடுத்து பெருமளவு அமெரிக்கர்கள்(us) வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்பவர்களும், அமெரிக்க ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்று அச்சப்படுவதாகவும், இனி, மத, இன, பாலின பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்கும் என்று கவலைகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், கூகுள் எனும் தேடுபொறியில், கனடாவுக்குச் (canada)செல்ல என்று தேடும் மக்களின் எண்ணிக்கை 1,270 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள் தரவு தெரிவித்துள்ளது.

அதேபோன்று, நியூசிலாந்துக்கு(new zealand) செல்வதற்காக கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அவுஸ்திரேலியா(australia) செல்வது குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை 820 சதவீதம் அதிகரித்திருப்பதகாவும் கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, புதன்கிழமை மாலைக்குப் பின்னர், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கூகுளில் தேடியவர்கள், இந்த மூன்று நாடுகளின் குடியேற்ற விதிகளை தேடுவது இதுவரை வரலாறு காணாத வகையில் அதிகரித்திருக்கிறது என்றும் கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பேர் குடியேற்ற விதிகளை தேடியிருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிடாதபோதும், நியூஸிலாந்து நாட்டின் குடியேற்றம் தொடர்பான இணையதளத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரே நாளில் 25,000 பேர் நவ.7ஆம் திகதி இணையதளத்தைப் பார்வையிட்டுள்ளனர் என்றும், இதே நாளில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,500 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, சில குடியேற்ற விவகாரங்களை கவனிக்கும் சட்டத்தரணிகளையும் பலர் தொடர்புகொண்டு சந்தேகங்களையும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற போது எடுத்த சில பல நடவடிக்கைகள் காரணமாக, பல அமெரிக்கர்கள் வெளிநாடுகளில் வேலைத் தேடத் தொடங்கியிருப்பதையே இந்த தரவுகள் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.