மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு ஜனாதிபதி தெரிவிக்கையில், “ஒன்றரை வருடத்தில் மின்சாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
மின்கட்டணத்தை 30%க்கு மேல் குறைப்போம்.அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், எரிபொருள் விலையை கூட குறைக்க கால அவகாசம் வேண்டும்.நாங்கள் இவற்றை செய்வோம்.” என்றார்.
Comments are closed.