முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்(sanath nishantha) மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச குடியிருப்பை ஒப்படைக்குமாறு அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பல முறை அறிவித்த போதிலும் அது தொடர்பில் கவனம் எடுக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையையும் அவர் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலைமையால் வழமையான முறையில் குறித்த இல்லத்தை கையகப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.
சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பை தவிர, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய ஏனைய அனைத்து குடியிருப்புக்களும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments are closed.