அநுரவின் முடிவுகளால் பலருக்கும் காத்திருந்த ஏமாற்றம்

4

அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முடிவுகளால் தற்போது பலருக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிடிவாத தன்மையுடன் செயற்படும் தற்போதைய அரசாங்கம் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை சரியான பதவிகளில் நியமிக்க தவறியுள்ளமையினால் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, ஜேவிபியினருக்கு மாத்திரம் முக்கிய பதவிகளை அநுரகுமார வழங்கி வரும் நிலையில் கடந்த அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்கும் எவ்வித மாற்றமும் இல்லை என மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் வழங்கிய வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் செய்ய தவறும் பட்சத்தில் எதிர்கால அரசியல் பெரும் கேள்விக்குள்ளாகும் என்றும் பேசப்படுகின்றது.

Comments are closed.