பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

6

திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடுமையாக சாடியுள்ளார்.

மாத்தறையில் நேற்று(04.11.2024) நிகழ்வொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் கடினமான காலங்களில் தங்கள் அனுபவத்தால் நாட்டைக் காப்பாற்றியவர்கள் இங்கே உள்ளனர்.

அரசாங்கத்தை நாங்கள் நடத்தி செல்ல வேண்டியுள்ளது. வங்குறோத்து நிலை நமது கடனை மீண்டும் நிலையானதாக மாற்றியுள்ளது.

உடன்படிக்கைகளின் படி செயற்பட்டு கடன் நிலையிலிருந்து வெளியே வருவோமென உறுதியளித்துள்ளோம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடியவர்களை நாம் இங்கு நியமிக்க வேண்டும். அதனால்தான் அனுபவசாலிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்’’ என்றார்.

Comments are closed.