நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய சகல மாவட்டங்களிலும் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் வாக்குச் சீட்டுகளை இரண்டு நெடுவரிசைகளாக அச்சிட தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வாக்குச் சீட்டுகளின் கீழ்ப் பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தும் வகையில் இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்குமென்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளர்.
பொதுத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து மனு நீக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அவசியமாக சகல பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளரினாலேயே வெளியிடப்பட்டிருந்தது. அந்த வர்த்தமானிக்கமையவே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்களால் அவர்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்களில் அவர்களின் வாக்குகளை பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்.
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 30, 01, 04ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன. இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறியிருந்தால் எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 30, 01, 04ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்ததோடு, இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறியிருந்தால் எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், வாக்களிப்புக்கு அவசியமான விடுமுறைகளை வழங்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதுதொடர்பில் முறைப்பாடு கிடைக்குமாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.