கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

7

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.