55 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்த அரச ஊழியர்கள்! மீண்டும் அதிகாரத்திற்கு ரணில்..

3

மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) மீண்டும்  அதிகாரத்திற்கு கொண்டு வர முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரச ஊழியர்கள் மாற்றுத் தெரிவை விரும்பியதன் காரணமாக 55ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அவர்கள் இழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அரச ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் ஜனவரியில் நூற்றுக்கு 24 வீதமாக அதிகரிக்கும்.

இதன் மூலம் புதிதாக அரச சேவையில் இணைந்துகொள்பவருக்கு அவரின் அடிப்படைச் சம்பளம் 55ஆயிரமாக அமையும். அதேபோன்று வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும் போது மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படுகின்றன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேர்தலை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டதல்ல. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது வருடாந்தம் மேற்கொள்ளப்படும் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை.

அதனால் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை முறையாக மேற்கொள்ள உதய செனவிரத்ன குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Comments are closed.