இந்த அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியை பலப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தையும் வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கோரி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பலப்படுத்த நாடாளுமன்ற அதிகாரம் தேவை என்ற வாதம் அரசியல் ரீதியில் பிழையானது என அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானங்களின் மூலம் சரியா திட்டங்களோ அனுபவங்களோ இன்றி செயற்படுவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களை முறையாக மாற்றி அமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த அமைச்சரவை தீர்மானங்களுக்கு எவ்வித பொறுப்பும் கூற முடியாது என தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்க முடியாது என சரித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.