முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு என சட்டத்தரணி மனோஜ் கமகே கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(31.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு (mahinda rajapaksa) ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கமகே தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.
சிலரது விருப்பத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரவை முடிவுகளை மாற்றுவது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.