நாட்டின் அரசியல் முறை, மாற்றப்பட வேண்டும் என்று அடிக்கடி கூறப்பட்டாலும், அது தற்போதுள்ள அரசாங்கத்தின் வழிக்கேற்ப மாற்றியமைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் வேட்டை நடத்தப்பட்டால், நீதிமன்றத்தில் முன்னிலையாகி, நீதிமன்றத்தின் உதவியை நாடுவதன் மூலம் சட்டத்தை பின்பற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடும் திறன் நாட்டில் யாருக்கும் இல்லை. எனவே எந்த விசாரணைக்கும் தாம் தயாராக உள்ளதாக நாமல் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவியை தக்கவைக்க ஏற்கனவே ஐந்து வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசில் அங்கம் வகிப்பதால் அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இல்லை.
அத்துடன் இனி ஒரு போராட்டத்தை வழிநடத்த யாரும் இல்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Comments are closed.