இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் சீனாவும் இலங்கையும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பரஸ்பர செழுமையை வளர்ப்பதற்கு முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சந்திப்பின் போது, இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கத்தின் ஆதரவை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.