கொழும்பில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த பெண் மரணம்

5

கொழும்பில் (Colombo) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாரஹேன்பிட்டி கிரிமண்டல மாவத்தையில் உள்ள ஆக்டீரியா ரெசிடென்ஸ் 9வது மாடியில் உள்ள குளியல் தொட்டிக்கு அருகில் இருந்து வீட்டை அலங்கரிக்கும் போது பெண் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 29 வயதான லோரா இமாஷா டென்சி என்ற திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியில் உள்ள மேல் குளியல் தொட்டிக்கு அருகில் தனது புகைப்படங்களை எடுக்க விரும்புவதாக அடுக்குமாடி வளாகம் பாதுகாவலரிடம் உயிரிழந்த பெண் கூறியதாக பாதுகாவலரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை அடிப்படையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தமை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

அவர் மது அருந்தியதாகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இறந்தவரின் தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மரணம் தொடர்பான உண்மைகள் மற்றும் நீதிமன்ற அறிக்கைகளை கேட்டறிந்த நீதவான் சம்பவ இடத்தில் ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனையை நடத்தி, பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

உயிரிழந்த பெண் குதித்தார விழுந்தாரா என விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Comments are closed.