வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

5

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிட் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் வாகன இறக்குமதி மூலம் நாட்டுக்கு 250 பில்லியன் ரூபா வரி வருவாயாக கிடைத்துள்ளதுடன், வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதன் மூலம் அந்த வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது டொலரின் மதிப்பு 288 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், வாகன இறக்குமதிக்கான அனுமதி பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.