முத்துவின் போனை திருடிவிட்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

6

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி விருது விழாவில் கூட அதிக விருதுகளை வாங்கியது.

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போதைய கதைகளம்படி, முத்துவின் போனை எப்படியாவது திருட வேண்டும் என ரோகிணி முயற்சி செய்து வந்தார். மீனாவின் தம்பி சத்யா குறித்து முத்துவின் போனில் இருக்கும் விஷயத்தை தெரிந்துகொள்ள ரோகிணி இப்படி செய்தார்.

முத்து போதையில் இருந்த நேரத்தில் அவரிடம் இருந்து போனை கைப்பற்றிவிட்டார். போனை காணவில்லை என்றதும் முத்து அதிர்ச்சியடைந்த தேட ஆரம்பிக்கிறார்.

போனை தேட சொல்லி மீனாவிடமும் சொல்கிறார் முத்து. இவை அனைத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டே ரசிக்கிறார் ரோகிணி. இதன்பின் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments are closed.