தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை விட தம்மை கொலை செய்வதே மேல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோஹித அபேகுணவர்த்தன, சேறு பூசும் பிரசாரங்கள் மூலம் தம்மை வீழ்த்துவது எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே தம்மை வெறுப்பவர்கள், சேறுபூசி தமது நற்பெயரைக் கெடுக்காமல், பல தலைவர்களை சுட்டுக் கொன்றதைப்போன்று தமது வாழ்க்கையையும் அழித்துவிடவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசத்திற்காகவும் அரசியலுக்காகவும் தனது உயிரை தியாகம் செய்ய தயார் என்றும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது சேறு பூசுவதை விட சிறந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமது குணத்தை அழிப்பதை விட தன்னைக் கொல்வதே மேல் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Comments are closed.