கண்டியில் தோளில் சுமந்து கொண்டு வந்த நண்பன் மரணம் – தப்பியோடிய நபர்

7

கண்டி, பிரிம்ரோஸ் கார்டன் பகுதியின் கீழ் பகுதியில் வீதியில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பிரிம்ரோஸ் பார்க் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது வீட்டிற்கு அருகில் நண்பர் ஒருவருடன் ஹெரோயின் பயன்படுத்தும் போது, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக மற்றுமொருவர் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

இடைநடுவில் குறித்த நபர் உயிரிழந்தை அறிந்ததும், உயிரிழந்தவரின் சடலத்தை வீதியிலேயே விட்டுவிட்டு நண்பன் தப்பியோடியுள்ளார்.

தப்பி ஓடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், அவரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

Comments are closed.