பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா மற்றும் இந்தியா அணிகளை ஏற்கனவே தோற்கடித்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி, இன்று (22.10.2024) ஜப்பானையும் வென்று தொடர்ச்சியான நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் 13ஆவது ஆசிய நிலை வலைப்பந்தாட்ட செம்பியன்சிப் போட்டியின் ஆட்டம் ஒன்றிலேயே இலங்கை மகளிர் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
ஆறு முறை செம்பியனான, இலங்கை அணி ஹெட்ரிக் பட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த முறை போட்டிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், நாளை மற்றொரு போட்டியில் இலங்கை அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.
அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாலைதீவுக்கு எதிரான ஆட்டம் இடம்பெறவுள்ளது.
Comments are closed.