இஸ்ரேலுக்கு எதிரான கடிதத்தில் இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தமது நாட்டுக்குள் பிரவேசிக்க இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து உருவாக்கப்பட்ட கடிதத்தில் இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது.
குட்டாரஸிற்கு ஆதரவு தெரிவித்து இந்த கடிதம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லெபனானில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை வன்மையாக கண்டித்துள்ளது.
பலஸ்தீனத்திற்கு தொடர்ந்தும் இலங்கை ஆதரவினை வழங்குவதாகவும், பலஸ்தீனத்தின் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Comments are closed.