ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் தற்போது கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் இருந்து ஊழல்வாதிகள் கொள்ளையடித்து உகண்டாவில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை கொண்டு வருவேன், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வேன், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை திருத்துவேன் என தேர்தல் மேடையில் ஜனாதிபதி அநுரகுமார கூறியிருந்தார். ஆனால் இவற்றை தற்போது மறந்து விட்டார்.
எனவே உடனடியாக கோமா நிலையில் இருந்து விழித்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவிக்க விரும்புகின்றேன்.
நேற்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நான் கோமாவில் இருப்பதாக மக்களிடம் கூறினார். கோமாவில் இருப்பது நான் அல்ல, ஜனாதிபதிதான் என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.