தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் எதிர்கால தீர்மானங்களுக்கு தலைமைத்துவம் மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்கும் மூலோபாய குழுவொன்றை அமைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அக்கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த வியூகக் குழுவை அமைப்பதன் முக்கிய நோக்கம், ஒரு கட்சியாக வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வலிமையையும் வழிகாட்டலையும் வேட்பாளர்களுக்கு வழங்குவதாகும்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச(namal rajapaksha) தனது எக்ஸ் பதிவில் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
Comments are closed.