எரிபொருள் விலைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி செய்து வந்த பிரசாரம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தாம் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தமது சட்டைப்பைக்குள் தரகுப்பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் மூலம் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.
தனது சட்டைப் பைக்குள் பணம் கிடைக்கப்பெற்றிருந்தால் அந்தப் பணம் தற்பொழுது துறைசார் அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவிற்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், எரிபொருள் விற்பனையின் உண்மை நிலையை வெளிப்படுத்திய அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தேசிய மக்கள் சக்தி, எரிபொருள் விலை குறித்து வெளியிட்டு வந்த தகவல்களின் உண்மை நிலை அம்பலபமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.