யாழ்ப்பாணம் (Jaffna) – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐந்தாம் வட்டாரம், அனலைதீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதான நடராசா துசியந்தன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ஒலிபரப்புவதற்காக மின்சார இணைப்புகளில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன்போது, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.